முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 2, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாத்தான் குளம் அருகே வெடி குண்டு போல கிடந்த மர்ம பொருள் : காவல் துறை விரைந்து சென்று நேரில் ஆய்வு

  சாத்தான் குளம் அருகே வெடி குண்டு போல கிடந்த மர்ம பொருள் : காவல் துறை விரைந்து சென்று நேரில் ஆய்வு தூத்துக்குடி  மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பன்னம்பாறை கிராமத்தில் மர்ம பொருள் இருப்பதாக தகவல் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளம் விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்து விளக்கம்.   தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பன்னம்பாறை கிராமம், மெயின்ரோட்டைச் சேர்ந்த இசக்கி கோனார் மகன் நல்லகண்ணு (வயது 74) என்பவர் இன்று (02.09.2020) காலை தனது வீட்டின் காம்பவுண்டு முன்பக்கத்தில் ஒரு மர்ம பொருள் இருப்பதாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  அவரது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. காட்வின் ஜெகதீஷ்குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பெர்னாட் சேவியர், வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்.ஐ. திரு. குலசேகரன், மோப்ப நாய் சேரன் மற்றும்  சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர...