முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 19, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை

  பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாணவர்  சண்முகவேல் சாதனை: பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் 30/1 /2023 மற்றும் 31/1/2023 ஆகிய இரு தினங்கள் போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் தூத்துக்குடி  பி எம் சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் சண்முகவேல் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 40 முதல் 42 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம்  வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாணவரின் பெற்றோர் திரு சுப்பிரமணி மற்றும் பயிற்சியாளர் சுப்புராஜ் அணி மேலாளர் ஸ்டீபன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழக நிர்வாகிகள் அனைவரும் மாணவரை வாழ்த்தினார்கள்.