முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 30, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

50 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்,

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கு காலத்தை முன்னிட்டு முத்தையாபுரம் மரியா மஹாலில் இன்று ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை  மற்றும்  காய்கறி  தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் மரியா மஹாலில் வைத்து இன்று (30.05.2021) ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த கால கட்டம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்தால்தான் கொரோன வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் ச...