தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2812 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துறை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ...