தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள் ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் (03.01.2022) அன்றுதுவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இழப்பினை சரிசெய்வதற்காகவும் கற்றல் இடைவெளியை போக்குவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டு வந்துள்ள திட்டம்தான் இல்லம் தேடிக் ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !