தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம்
தூத்துக்குடியில் கடந்த 6-11-2022 அன்று காலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் திரு எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் மாநில ஆலோசகர் திரு மு வெற்றிவேல் அவர்கள் கலந்துகொண்டு சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மற்றொரு விழாவினை பற்றியும் பணியாளர்களின் குறைபாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார் இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கிளை சங்கத்தின் சார்பில் வருகின்ற 13/11/ 22 .அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகின்ற நமது சங்கத்தின் முப்பெரும் விழாவின் கலந்து கொள்வது சம்பந்தமாகவும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது இதில் தலைமைச் சங்கம் கீழ்க்கண்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 1. மருத்துவமனையில் போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லை ஆகையினால் நிரந...