தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய காவலர் கனகவேல்; அவர்கள் சாலை விபத்தில் 16-07-2021 அன்று காலமானார். அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தருவைக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் திரு. கனகவேல் (26) அவர்கள், அவரது சொந்த ஊரான சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, தருவைக்குளம் காவல் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வடக்கிலிருந்து தெற்காக திரும்பி வரும்போது பாலார்பட்டி விலக்கில் வந்தபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் என்ற வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 17.07.2021 அன்று அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !