கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. ------------------------------------------ கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்கள் முதுமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 17.05.2021 அன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று (19.05.2021) அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத் தொல்பொருள் துறை அமைச்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !