தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் 123 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார். ------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (18.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, 123 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக ந...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !