21.08.2020 தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று (20.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடி நீண்ட நாள் கோரிக்கையாகும். அருகில் தென்காசி மாவட்டம் உருவாகியுள்ளது. சோதனைச் சாவடி என்பது மிக, மிக முக்கியமான ஒன்றாகும். முன்பு இந்த சோதனைச் சாவடி சாதாரண கொட்டகையாகத்தான் இருந்தது. இப்போது காவல்துறையினர் வாகன சோதனை பணியை மேற்கொள்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு;ள்ளது. இந்த சோதனைச்சாவடி அமைந்திருப்பது உங்களுடைய சமுதாயப்பணியில் ஒன்றாக இந்த திறப்பு விழா அமைந்துள்ளது, இந்த சோதனைச் சாவடி கட்டிடம...