முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 12, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். ----------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (12.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு தேவையான ரூ.1.99 லட்சம் மதிப்பிலான் வீல்சேர், மாஸ்க், பல்ஸ் ஆச்சிமீட்டர், சாணிடைசர், பிபி கிட், பெட்சீட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலர்கள், முக்கிய ...

தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள்

  தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்களை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார். ------------------------- தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை  மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.06.2021) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிங்கிதுறையில் 5 மீனவர்களுக்கும், கொம்புதுறையில் 5 மீனவர்களுக்கும், அமலிநகர் மீனவர்கள் 8 நபர்களுக்கும், ஆலந்தலை மீனவர்கள் 7 நபர்கள் என மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான வெளிப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் மாண்புமி...