தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி. பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு இன்று (24.07.2021) ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி...