முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 26, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் : அமைச்சர் திரு.கே.என்.நேரு தகவல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை  விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ------------------------------------------------------------------------------     தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.56.65 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் மற்றும் 15வது நிதிக்குழுத் திட்டங்களின்கீழ் முடிவுற்ற பணிகளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (26.05.2023) திறந்து வைத்தார். ரூ.10.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.7.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டோபிகானா, ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சிக்குட்பட்ட 8 பகுதிகளில் பூங்கா, ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளமீட்பு மையம், சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, ரூ.2 கோட...