பதிவு: பிப்ரவரி 26, 2019 04:15 AM தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விடுத்துள்ளார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தேனிக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இதற்காக மேல்முறையீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில், மேல்முறையீடு செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் மேல் முறையீடு செய்தவர்கள் 15 பேர் கலந்துகொண்டனர். விசாரணையை தொடர்ந்து அரசின் பல்வேறு துறை அலுவலக பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் மாநில தகவல் ஆணைய...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !