கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (25.04.2021) நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதலில் இன்று (25.04.2021) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பில்; தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !