அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புகை சீட்டு பெறுவதோடு காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் குறைகளை காணொளி காட்சி வாயிலாக தெரிவிக்கவரும் பொதுமக்கள் அனைவரும் தாலுக்கா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள...