முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 8, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  ----------------------- தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.12.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இளம் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:   தொழில் முனைவோர்கள் மீது நம்பிக்கை வைத்து கடன் வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி கடனை நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என நம்புகிறேன். குறுகிய காலத்தில் அதிகஅளவிலான பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கியுள்ளார்கள். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு தொழில் முனைவோர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி நகரம் சிறிய நகராட்ச...

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய. காவல் துறையினருக்கு பாராட்டு

          தூத்துக்குடி  மாவட்டத்தில்  கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய  3 காவல் ஆய்வாளர்; உட்பட 14 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய திருட்டு வழக்கு எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருந்த திருடுபோன 3 பவுன் தங்க நகையை மீட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய முதல் நிலை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சிவராஜா, முதல் நிலை காவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் ராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், தாளமுத்துநகர் காவல் நிலைய போக்சோ சட்டம் மற்றும் சிறுமி காணாமால் போன வழக்கில், காணாமல்போன 13 வயது சிறுமியை திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை சென்று மீட்;டு, எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த வடபாகம் காவல் நிலைய தலைமை பெண் காவலர் சண்முகனி மற்றும் முதல் நிலை காவலர் ஆனந்தகுமார் ஆகியோரின்  மெச்சத்தகுந்த பணிக்காகவும், பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 02.11.2021 அன்று நடைபெற்...