முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 5, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

   தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,அவர்கள் தகவல். ---------------------     தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்¤த் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பிக்கத் தகுதிகள்       உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் 01.01.2021 அன்று 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன் ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் வட்டாட்¤யரிமிருந்து இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று மற்றும் இதர விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்¤த் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அ...