நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான நிலை தற்போது இல்லை.அக்டோபர் 30-ந்தேதிக்கு மேல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி தமிழகத்தையொட்டி உருவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !