முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 22, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

538 காவல்துறையினருக்கு பணி மாறுதல் : தூத்துக்குடி மாவட்ட எஸ். பி. உத்தரவு

*தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய  இரண்டாம் நிலை காவலர்கள், முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள மொத்தம் 538 காவல்துறையினருக்கு கலந்தாய்வின் மூலம் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கி உத்தரவு.* *தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு இரண்டாம் கட்டமாக  22.12.2022 அன்று  மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று பொதுமாறுதல் வழங்கினார்.   கடந்த 19.12.2022 அன்று முதற்கட்டமாக 271 காவல்துறையினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து   தூத்துக்குடி ஊரகம், கோவில்பட்டி, மணியாச்சி, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிற...

39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இணைந்து நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று (21.12.2022) தொடங்கி 3 நாட்கள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  இதில் முதல் போட்டிகளில் திருநெல்வேலி மண்டல அளவில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், விளையாட்டு போட்டிகளில் ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றிபெற முடியும், அதே போல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

     தூதுக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமயில் நடைபெற்றது.   தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக (ர்ழஅந புரயசனள) தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு கடந்த 14.12.2022 அன்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி இன்று (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 52 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 389 பேர் ஆஜராகியிருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைைமயில் நடைபெற்றது.  இத்தேர்வு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், ஆயு...