*தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்பு
*தூத்துக்குடியில்இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்பு* தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (38) மெரைன் இன்ஜினியராக உள்ளார்.அவரது நண்பர் பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் (38) இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது, அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர்களை அக்கம்பக்கத்தில் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சையாக கொண்டு வந்துள்ளனர்.ஆனால் அவர்கள் கொண்டு வரும் வழியே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித...