தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று பரிசோதனை 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைப்பு .
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் இன்று (18.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகள் வழங்கிடவேண்டும்.இதற்குதேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் ஈடுபடுத்திட வேண்டும். அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிசிச்சைகளை அளித்திட வேண்டும். தூத்துக்குடி மருத்துவமனையில் ஆக்சிசன் லைன் படுக்கைகளுக்கு ஏற்றவாறு தேவையான அளவு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள். கூட்டத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்...