திருடு போன. இருசக்கர வாகனங்கள் - மடிக்கணினி - செல்போன்கள் மீட்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது - ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்கள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தலைமை காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் திரு. மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. ம...