முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 6, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அய்யா வைகுண்டரின் 193 ம் ஆண்டு அவதார தின விழா

. தூத்துக்குடி பல்சமய Symptoms பணிக்குழு சார்பில் அய்யா வைகுண்டரின் 193 ம் ஆண்டு அவதார தின விழா இன்று மதியம் 2  மணி அளவில், மார்க்கெட் சிக்னல்,  அருகில் கொண்டாடப்பட்டது.   அருள் பணி. பென்சிகர்லூசன் அவர்கள்  தலைமையில் தங்கையா, குணசீலன், சுதந்திர  ராஜ், மைக்லின் மேரி, தினேஷ் ஆகியோரும், இஸ்லாமிய சமயம் சார்பில் மின்னல் அம்ஜத், ஷாஜகான், காதர், முபாரக் ஆகியோரும் அய்யா வழி மக்கள் சார்பில் ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, சுகுமார், சந்தன மாரிமுத்து,பாஸ்கர், மகாலிங்கம், பெருமாள், சுசி பாலன், சௌந்தரபாண்டியன் கணேசன் - கிருஷ்ணவேணி ஆகியோரும் கலந்து கொண்டனர். கிருஷ்ணவேணி கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.  அருள் பணி.பென்சிகர்லூசன் சிறப்புரை ஆற்றினார். தங்கையா, குணசீலன், மின்னல் அம்ஜத் ஆகியோர் வாழ்த்துரைகூறினார்கள்.  இறுதியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் அய்யா வைகுண்டரின் 193ம் ஆண்டு அவதார தின விழாவிற்காக பொதுமக்களுக்கு இனிப்பு தர்மம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.