முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 28, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம;

: பிப்ரவரி 28, திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில்  டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு  நேற்று காலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.  அந்த பஸ்சை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த துரை  - வயது 37  ஓட்டிச் சென்றார். பஸ்சில்    சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். திருச்செந்தூர் அருகே கோயில்விளையை கடந்து சென்றபோது, முன்னால் சென்ற வேனை  பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது நிலைதடுமாறிய பஸ், சாலையின் வலதுபுறத்தில்  உள்ள மரங்களின் கிளைகளில் மோதியவாறு சென்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி  முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில் டிரைவர் துரை காயமடைந்தார். உடனே டிரைவர்  திடீரென்று ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தினார்.        அப்போது பஸ்சின் முன்பக்கத்தில் தனி இருக்கையில் இருந்த பாளையங்கோட்டை  சமாதானபுரத்தைச் சேர்ந்த ஜெயா - [25]  நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்து காயமடைந்தா இந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயா, டிரைவர் துரை ஆகிய 2 பேர...