தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கும், அவற்றை அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200ஃ- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (09.04.2021) தூத்துக்குடி காவல்துறை சார்பாக குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பரவாமல் தடுப்பதற்கான அரசு விதித்துள்ள நெறிமுறைகள்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !