முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 11, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ... வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ... வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்வழங்குவதற்காக, அவர்களின் வருகைப்பதிவேட்டை ஒப்படைக்கும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முந்தைய பருவத் தேர்வுகளில் (காலாண்டு, அரையாண்டு) பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்குமதிப்பெண்கள்வழங்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள்வழங்குவதற்கான பணிகள் கல்வித்துறை தொடங்கி உள்ளது. இதற்காக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டைஒப்படைக்கவேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை நாளை மாலைக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என...

பத்து நாட்கள் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப் படாததால்... லெவஞ்சிபுரம் பகுதி மக்கள் சிரமம்

பத்து நாட்கள் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப் படாததால்... லெவஞ்சிபுரம் பகுதி மக்கள் சிரமம் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால்மக்கள் மிகவும் சிரமத் திற்கு  உள்ளாகியுள்ளனர்   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதாள சாக்கடைப் பணிகள் நிறுத்தி வைக்க்பபட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அடிப்படைத் தேவையான குடிநீர் இன்றி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்கவும், குடிநீர் சீராக விநியோகம் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்ஆலந்தலைமீனவர்கிராம பகுதியில்கடல்அரிப்பு அதிகமாக ஏற்பட்டு,கடலோர பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் மற்றும் படகுகள்  சேதம் அடைவதாகவும், மீன் தொழிலில் ஈடுபடும்போது அதிகமாக பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள சுமார் 3,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்எனகோரிக்கைமனுக்களைமாண்புமிகுசெய்திமற்றும்விளம்பரத் துறைஅமைச்சர்திரு.கடம்பூர்செ.ராஜூ    அவாகள்மூலம்தூத்துக்குடிமாவட்டத்திற்கு வருகை தந்த போது மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களிடம்அளித்தார்கள்மாண்புமிகுதமிழ்நாடு        முதலமைச்சர்  தூண்டில் வளைவு  அமைப்பது    தொடர்பாக சாத்தியக் கூறினை   ஆராய்ந்து, அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம்  தெரிவித்தார்கள்                                                           ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதுவும் தொடர்ந்து கொரோணா தொற்று கண்காணிப்பு மற்றும் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதுவும் தொடர்ந்து கொரோணா தொற்று கண்காணிப்பு மற்றும் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  10.06.2020) அன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளி வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்எ னவும்என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் நியாயவிலைக்கடை யில்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை  பார்வையிட்டு, பொதுமக்கள் முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவ...