திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்; தலைமையில் நடைபெற்றது. (15.10.2020) மாலை திருச்செந்தூர் செல்வம் மஹாலில் போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்கக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது, நமது உடம்புக்கு தண்டுவடம் எப்படி முக்கியமானதாக உள்ளதோ, அதேபோன்று ஒரு நகரம் அல்லது கிராமத்தின் தண்டுவடம் வியாபாரிகள் ஆகும், ஒரு நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கின்றது என்பதை காட்டுவதில் முக்கியபங்கு அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தான். போக்குவரத்திலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரை நமக்கு முறையாக தகவல் சொல்லி ஒத்துழைப்பு கொடுப்பவர்களும் வியாபாரிகள் தான். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் காவல்துறைக்கும் ஒரு நல்ல இனக்கமான சூழல் இருக்க வேண்டும் ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !