முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 15, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம்.

  நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம். 14 - 1 -2023 சனிகிழமை அன்று  காலையில் , தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில்  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி சார்பாக நாசரேத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி சிலம்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் டென்னிசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். புது பானையில்  மாணவ மாணவிகளால்  பொங்கல்  விடப்பட்டது.  அனைத்து சிலம்ப மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சிலம்பம் சுற்றி தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக உற்சாகத்தோடு கொண்டாடினர்.  பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அஇஅதிமுக வார்டு செயலாளர் பெரியதுரை,12 வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், குமார்,ஜெய்சங்கர், உலக ஆனந்தன், மாஸ்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. சமத்துவ பொங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை வாளாகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று (14.01.2023) காவல்துறையினருடன் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார். அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.   இவ்விழாவில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பா...