தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்;. கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி...