முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 8, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

  08.03.2022 செய்திக் குறிப்பு  மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு ---------------------------       தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட ஏதுவாக 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஃமாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.  குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 12-03-2022 அன்று நடைபெறவுள்ளது.             குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் கலை 10.00 மணிக்கும் கிராமிய நடம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும் குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.  தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்  குரலிசையிலும், நாதசுரம், வயல...

தேசிய அளவிலான பென்சாக் சிலாட் போட்டிக்கு தகுதி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா.

  தேசிய அளவிலான பென்சாக் சிலாட் போட்டிக்கு தகுதி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா.  மார்ச் 11 தேதி முதல் 14 தேதி வரை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஜிஹெச்ஜி கால்சா கல்லூரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சீனியர் பென்சாக் சிலாட் போட்டிக்கு தேர்வு பெற்ற தமிழக  அணியின் தூத்துக்குடி வீரர்கள்  செய்யது சாகில் (45-50),சூர்யா ராம்(75-80), சதீஷ்குமார்(80-85) அந்தோணி ஜான் ரோபிஸ்(90-95), ஹசீனா பேகம்(45-50), சிந்து  (50-55) மற்றும் கண்டா பிரிவில் தேர்வு பெற்ற தங்க ராஜசேகர் ஆகியோர்களுக்கு பாராட்டுவிழா அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக  ஒருங்கிணைப்பாளர்  கதிரேசபாண்டியன், டாக்டர் பச்சைமால், லயன் ராமகிருஷ்ணன் மற்றும் சாய் இன்டர்நேஷனல் அகாடமி தலைமை பயிற்சியாளர் முத்து சங்கர் குமார் ஆகியோர் வெற்றிபெற்ற வீரர்களையும் பயிற்சியாளர் கபிரியேல் சாலமோன் ,சுடலை கண் ஆகியோரையும்  பாராட்டி கௌரவித்தனர்.  விழா ஏற்பாடுகளை சாய் இன்டர்நேஷனல் அகாடமியின் பயிற்சியாளர்  காஜா ரகுமான் செய்திருந்தார்.