உலக ஓவியர்தினம் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சிகள் நடத்துதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக 6 வயது முதல் 16 வயது வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கராத்தே ஆகிய கலைகளில பகுதி நேரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று ஓவிய பயிற்சி பட்டறை நடத்திடவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள் துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில்; நடத்த...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !