97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் : சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார். ---------------- தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரேசன் கார்டுகளை வழங்கினார். பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை குடும்ப அட்டைகள் விண்ணப்பித்ததில் 22.7.2021 அன்று 4566 நபர்களுக்கு புதிய குடும்ப ...