முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 1, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

73ஆவது குடியரசு தினம்: தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை

73ஆவது குடியரசு தினவிழா தினத்தில் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியை சேர்ந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவப் படுத்தப்பட்டனர்  தியாகி கழுகுமலை புசைப்பிள்ளை |  ,தியாகி அழகப்ப செட்டியார் ,  தெய்வு  தியாகி IiNS. மாடசாமி , இவர்களது வாரிசுகளான _  வை சோமசுந்தரம், சங்கர குற்றாலம் , கே எஸ் செல்வம் , இந்திரா ராமஜெயம்,  இவர்களுக்கு கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா அவர்களும் மற்ற  அலுவலர்கள ஆகியோர்  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவ படுத்தபட்டனர். சுதந்திர போராட்ட  தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகிகளின் வாரிசுகளை கௌரவப்படுத்திய தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்  கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு   கோவில்பட்டி சுதந்திர போராட்ட தியாகிகள்  நல வாரிசுகள் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது

வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் மலர் தூவி வரவேற்பு

"விடுதலைப் போரில் தமிழகம்"  என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட " வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தது  வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் எட்டையாபுரம் விளாத்திகுளம் விளக்கில் இன்று மலர்தூவி வரவேற்றார்  உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரு கருணாநிதி ஆனந்த சேகரன் திரு முருகேசன் திரு நவநீதகிருஷ்ணன் திரு பாரதி கணேசன் திருமதி கஸ்தூரி தங்கம் சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை

"விடுதலைப் போரில் தமிழகம"   என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி யிணை மாவட்ட ஆட்சித் தலைவர் மறுகி செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் மதுரை தூத்துக்குடி  தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச் சாலையில் இன்று மலர் தூவி வரவேற்றனர்  உடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு சங்கர நாராயணன் ஆகியோர் உள்ளனர