முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 14, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு

திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு       தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில்; புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையத்தை இன்று   மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இன்று (14.10.2020) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்செந்தூர் மெயின் ஆர்ச் அருகே திருச்செந்தூர் போக்குவரத்து துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் நோக்கமாகும். மேலும் தூத்துக்குடியின் முக்கிய நகரமான திருச்செந்தூர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும்  மக்கள் அடிக்கடி அதிகம் கூடுமிடமாகும். அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடமாக திருச்செந்தூர் உள்ளது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் ப...