முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 27, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

" தண்ணீர் குறைபாடு இருக்காது " தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மே 27:    நீர்தேக்க அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் வரும் 30ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வித குடிநீர் பாதிப்பும் இருக்காது என தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.    தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் சந்திப்நந்தூரி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விரைவில் மழை பெய்யும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித குடிநீர் பாதிப்பும் இருக்காது.    போர்வெல் கிணறுகள் மூலம் குடிநீர்சப்ளை செய்யப்படும் கிராமங்களில் போர்வெல் வறண்டுவிட்டால் அவர்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் துவங்கப்பட உள்ளது. மின்வெட்டு அறவே கிடையாது. பராமரிப்பு பணிகளால் மட்டுமே மின்தடை செய்யப்படுகிறது என கூறினார்.

கோவில்பட்டி ஹாக்கி போட்டியில் சாம்பியன் ஷிப்

அகில இந்திய ஹாக்கி: பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி சாம்பியன்    கோவில்பட்டி, மே 27:   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியுடன் இணைந்து கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இம்மாதம் 16ஆம் தேதி முதல் அகில இந்திய ஹாக்கிப் போட்டி நடைபெற்று வந்தது.        இப்போட்டியில் 16  அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில், 14ஆவது நிமிடத்தில் பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி வீரர் முகமது ரஹீல் மௌசின் ஒரு கோல் அடித்தார். 18ஆவது நிமிடத்தில் அதே அணி வீரர் குஷா ஜெபி கௌடா ஒரு கோல் அடித்தார். 29ஆவது நிமிடத்தில், செகந்திராபாத் அணி வீரர் இ...

ஹாக்கி போட்டி

      வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அபிராமி மஹாலில் வைத்து சமுதாய விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.      இதில் இரண்டாம் வகுப்பில் 90 மதிப்பெண்கள் பெறும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது 9 மாவட்டங்களில் உள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து வேலைவாய்ப்பு அளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ்க்கு உதவியாளர்களாக நியமிப்பது எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மருத்துவம் ரயில்வே வங்கி ராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழி காட்டுவதே மற்றும் பயிற்சி அளிப்பது கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டது. இதில் வேலம்மாள் மருத்துவக் கல்வி தலைவர் எம் வி முத்துராமலிங்கம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி கல்வி ஆல...