முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 11, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

  தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய "கவிதைப் பூஞ்சோலை"கவிதை நூல் வெளியீட்டு விழா  (10.09.23) ஞாயிற்று கிழமை காலை 11 மணி அளவில் தூத்துக்குடி  அழகப்பா கல்வி மைய அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதலாவதாக    D.தனசேகர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்   தொடுவானம் இலக்கிய இதழின் ஆசிரியர் நெல்லை தேவன், தொடுவானம் கடந்து வந்த பாதை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய போட்டிகள் குறித்துப் பேசினார்.தொடர்ந்து இந்த ஆண்டு நடத்திய புதுக்கவிதைப்போட்டி குறித்தும் பேசினார்.     கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளை ஆசிரியர் தேவன் மற்றும் துணையாசிரியர் ஆ.மாரிமுத்து இருவரும் வாசித்தார்கள்.      கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன்  தொடுவானம் இதழ் குறித்துப் பேசினார் நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக ... வீதிநாடகக் கலைஞர்.ப.சக்திவேல் நூலாசிரியரைப்பற்றி அறிமுக உரையாற்றினார். தூத்துக்குடி சரவணா ஹோட்டல் உரிமையாளர் திரு.செந்தில் ஆறுமுகம் நூலை வெளியிட சுபா கிராபிக்ஸ் உரிமையாளர் தி...