காவல் துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சார்ந்த தூய்மைப்பணியாளர்கள் - மீனவர்களுக்கு நிவாரண பொருள்கள்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் -ஐ மற்றும் புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு ஆகிய பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சேர்ந்த சிரமப்படும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கும், புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்பட்டு வரும் மீனவர்கள் 25 பேருக்கும் அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது, அதற்காக தமிழக அரசு வரும் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. 7ம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும், அத்தியவாசியப பொருட்கள் காய்கறிகள், பழங்கள் கூட அரசாங்கத்தால் வா...