முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 21, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் வாபஸ் ,

தூத்துக்குடியில் 22.05.2018 அன்று  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாhணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.  இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது.   இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.   மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை  அறிவித்துள்ளார்கள்.  இந்த சம்பவம...

*கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்

 *கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் அறிவுரைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து  21-05-2021 வெள்ளி கிழமை அன்று  ஆற்றுப்படுத்துநர்களிடம் பொதுமக்களால்  கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து இணையவழி கருத்தரங்கம் வாயிலாக பதில் கொடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு Dr. Vinay kumar, Joint Director Immunization, Directorate of Public Health, Chennai மற்றும் Dr. Ajay Shankar, Medical Officer, Health Department, Kovilpatti அவர்கள் விளக்கமளித்தனர். இக்கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி  Smt. Shelin George, Dr. Kanniyammal, APM- NHM, Thoothukudi மற்றும் Dr. Somasundaram, DTTMO, Thoothukudi அவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.