கரோனா தொற்று பணியினை தைரியத்தோடும் அர்பணிப்போடு எதிர் கொண்டு மீண்ட காவலர்கள் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 38 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. லட்சுமி பிரபா, முதல் நிலைக் காவலர் திருமதி. ராமலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம்; காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. சொர்ணராணி, சிறப்பு உதவி ஆய்வளார் திரு. பிள்ளைமுத்து, முதல் நிலை பெண் காவலர் திருமதி. திருவரங்கசெல்வி, காவலர் திரு. நித்தியானந்தன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வளார் திரு. மயிலேறும் பெருமாள், தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் திரு. சேரந்தையன், சிப்காட் காவல் நிலைய உதவி...