முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 6, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேவாரப்பண் இசைப்போட்டி

  தூத்துக்குடியில்  மஹா சிவராத்திரி உற்சவத்தை  அன்று  அருள்மிகு .பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் கலை அரங்கத்தில்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  தேவாரப்பண் இசைப்போட்டி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  SMS  இசை மற்றும் நாட்டிய பள்ளி Institute மாணவிகள் J.SE.லக்ஷினி Senior பிரிவில் முதல் பரிசும்,வளர்மதி மூன்றாம் பரிசும்,Junior பிரிவில் செல்வஶ்ரீஸன்விகா மூன்றாம் பரிசும் பெற்றனர். தூத்துக்குடி  மாநகரம் முழுவதுமிருந்து  சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு  பரிசுகளை தொழிலதிபர்.D.A.தெய்வநாயகம் வழங்கினார். இந்த போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி வ.உ.சி.இளைஞர் அணி மற்றும் இந்து அறநிலையத்துறையும் இணைந்து செய்திருந்தனர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1)-ன் கீழ் தகவல் தராத அலுவலர்கள் மீது நடவடிக்கை

  தூத்துக்குடி மாவட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இரண்டாம் மேல் முறையீடு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில தகவல்  ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார் அவர்களால் நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற 61 வழக்குகளில். 4 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார்அவர்கள் தகவல் --------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் நீதிமன்றம் கூடத்தில் வைத்து தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 கீழான இரண்டாம் மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில பொது தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார் அவர்களால் இன்று (04.03.2022) நடத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்;  முனைவர் பிரதாப்குமார் அவர்கள்; தெரிவித்ததாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் ஆணையர்கள் மற்றும் தலைமையாணையர் உட்பட பல்வேறு அலுவலர்களால் அனைத்து மாவட்டங்களிலும்  மனுதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்...