ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். கொரோனா கால ஊரடங்கின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்;, ஏழை எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும்; இயங்கும் காவல்துறையின் புதிய சேவைக்கான தனிப்பிரிவு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (26.05.2021) துவக்கி வைத்து, பொதுமக்கள், தங்கள் உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண். 95141 44100 எண்ணையும் அறிவித்திருந்தார். நேற்று அறிவித்தது முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !