இஸ்ரோ நில எடுப்பு கையகப்படுத்தப்படும் பகுதி சேர்ந்தவர்களுக்கு வசதியுடன் கூடிய குடியிருப்பு அமைக்க நில தேர்வுக்கான கள ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில் இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். ---------------- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில் இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெற்ற...