தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா ----------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காவல்துறை 79 நபர்களுக்கு மெடல், 17 நபர்களுக்கு சான்றிதழ், கொடிநாள் நிதி வசூல் செய்தவர்களுக்கும், முன்னாள் படைவீரர் நலன், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட ஆகிய து...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !