திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள். குறித்து ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.02.2022) நடைபெற்றது. திருக்கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துதல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை 12 தினங்கள் கொண்டா...