நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும். பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500 - / வழங்கப்பட உள்ளது
நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும். பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500 - / வழங்கப்பட உள்ளது -பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை மற்றும் ரு.2500- /- (ருபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட உத்திரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 12.01.2021 வரை பொங்;கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500ஃ- வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட மின்னணு குடும்ப ...