முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 26, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"அப்பாவின் இரண்டாவது மரணம்" என்ற சிறுகதை நூல் பற்றிய ஆய்வு

தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 11-ஆவது நிகழ்வு கடந்த ஞாயிறு(21.01.24) அன்று தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தில் உள்ள சித்திரக்கூடம் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்- நாசரேத்தைச் சார்ந்த தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதிய "அப்பாவின் இரண்டாவது மரணம்"  சிறுகதை நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் கவிஞர் சைமன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடியைச் சார்ந்த தமிழாசிரியர் முனைவர் சு.முருகன் மற்றும் நாசரேத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் இருவரும் நூலைக்குறித்து சிறப்பாக ஆய்வு செய்து பேசினர். மூக்குப்பேரி கவிஞர் தேவதாசன்,நாசரேத்தைச் சார்ந்த மேனாள் பேராசிரியர் காசிராசன் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். புலைவர் சு.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிது நிறைவுற்றது. பேரவையின் சார்பில் நூலாசிரியருக்கு சான்றிதழுடன் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தோழமையுடன்- நெல்லை தேவன்.

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா

 தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா  26 1 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 75வது குடியரசு தினத்தில் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக நமது தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது   இந்த விழாவில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் , "ஹியூமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பு ஆசிரியருமான டாக்டர் திரு .S.சுந்தர் அவர்களின் வழிகாட்டுதல் படி தூத்துக்குடி மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் திரு. T.J  கார்த்திகேயன்  தலைமையில், மற்றும் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர்  P. ரமேஷ் அவர்கள்  முன்னிலையில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின்  ஆட்சி மன்ற குழு தலைவர் திரு A.V.லினோ அவர்கள் தேசிய  கொடியேற்றினார் பின்னர் இனிப்புகள்  வழங்கப்பட்டது இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட புரவலர்  திரு.செல்வராஜ் மாவட்டஅமைப்பாளர்  சம்சுதீன்  ஒருங்கிணைப்பாளர்  திரு. சின்னச்சாமி - மக்கள் தொடர்பு அலுவலர்  கரிகாலன் -  மாவட்...