முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 20, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டி : இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவலர்களுக்கு பாராட்டு

 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில்; வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  கடந்த 06.01.2022 முதல் 09.01.2022 வரையில், திருச்சி ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கத்தில் தமிழக காவல்துறையினருக்கான மண்டலங்களுக்கு இடையே கபடி, கையூந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, கொகொ மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  இப்போட்டியில் தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ மற்றும் சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் கூடைப்பந்து போட்டியில் தெற்கு மண்டலம் சார்பாக 12 காவல்துறையினர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து கேடயம் மற்றும் பதக்கம் பெற்றுள்ளனர்.  இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மத்தியபாகம் காவல்நிலைய...