கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18.01.2021 முதல் தினம் தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு. சங்கர் அவர்கள் தலைமையிலான சஹா கிராம...