பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) வழங்கியுள்ளனர். மேற்படி உடைகளை இன்று (02.12.2020) காலை வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கொர...